குடியுரிமை இந்திய மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்

கோவை: குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) இந்தியர்களுக்கு எதிரானது இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

கோவை வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியில், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது வெங்கையா நாயுடு பேசியதாவது: நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் 100 சதவீத கல்வியறிவு பெற முடியவில்லை. விவாத கலாசாரத்தை தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஊக்குவிக்கிறது. அதைத்தான் மத்திய அரசும் விரும்புகிறது. காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, முத்தலாக் ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவை பார்லிமென்டில் விவாதத்திற்கு பின்பு நிறைவேற்றப்பட்டன. குடியுரிமை இந்திய மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சட்டம், இந்திய குடியுரிமையை எதுவும் செய்யாது.


கோவை, பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார். மாணவ, மாணவிகளிடையே பேசிய அவர், விவாத கலாசாரத்தை தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஊக்குவிக்கிறது. அதைத்தான் மத்திய அரசும் விரும்புகிறது என்றார். 370 சட்ட பிரிவு நீக்கம் ; முத்தலாக், சி.ஏ.ஏ.,போன்றவை விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன. சி.ஏ.ஏ., இந்திய மக்களுக்கு எதிரானதல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. இதில் அந்நிய நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேசினார்.